100 வெப்சைட்டுகளை முடக்கி மத்திய அரசு
வேலையில்லாத இளைஞர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், இல்லத்தரசிகளை குறிவைத்து, ஆன்லைனில் பகுதி நேர வேலை என பல கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் விளம்பரத்தை கிளிக் செய்யுமாறும், வீடியோவுக்கு லைக், சப்ஸ்கிரைப் ரேட்டிங் எனவும் கூறி, பல்வேறு வேலைகளை அந்தக் கும்பல் கொடுக்கிறது. தொடக்கத்தில், டாஸ்க் முடிக்கும் அடிப்படையில் கமிஷன் கொடுக்கப்படும் நிலையில், பின்னர் ஆசையை தூண்டி அதிகளவில் முதலீடு செய்ய வைக்கும் கும்பல், அதன்பிறகே மோசடியில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்டு வந்த 100 வெப்சைட்டுகளை நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது..
Next Story