டவருக்காக கைப்பற்றப்பட்ட இடம்.. பொங்கியெழுந்த பொதுமக்கள் - போலீசாருடன் தள்ளு முள்ளு...
சங்கரன்கோவில் நெசவாளர் காலனி பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர்
அமைக்க ஒப்பந்த அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தனியார் செல்போன் டவர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. போலீசார் பாதுகாப்போடு
பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து செல்போன் டவர்
அமைக்கும் பணிகள் ஜேசிபி இயந்திரம்
உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பணிகளை தடுக்க முயன்றனர். அவர்களை போலீசார்
தடுத்தால் பொதுமக்கள் தள்ளு- முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Next Story