கிருஷ்ணகிரி விவகாரம்.. வெளியான CCTV வீடியோ.. எச்சரிக்கை கொடுத்த போலீஸ்

x

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் தொடர்பாக வதந்தி பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவராமன் எலி மருந்து உட்கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், அவரது தந்தை இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உண்மைக்கு புறம்பாக தகவல் பரப்பினால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்