காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு.. மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக இதனை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் தெரியப்படுத்த வேண்டும் எனவும், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்படுவதோடு, முகாம்களில் தங்க வைக்கப்படுவோருக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். காவிரியில் குளிப்பது, நீந்துவது, மீன்பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், இளைஞர்கள் ஆபத்தான நிலையில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்