கோயில் பெயரில் உள்ள ஆவணங்களில் சாதி பெயர் ... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் உள்ள கோயில்களின் சொத்துக்களில், கோயில் பெயருக்கு முன்பு குறிப்பிட்ட சாதியின் பெயரை சேர்த்து ஆவணங்கள் திருத்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அறங்காவலர் என்கிற பெயரில் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது "பொதுக் கோவில்" என்கிற தன்மையை மாற்ற முடியாது என்று தெளிவுபடுத்தினார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் பெயருக்கு முன்னால், சாதி பெயரை சேர்த்தால் தவறாக புரிந்துகொள்ளும் சூழலை உருவாக்கும் என சுட்டிக்காட்டினார். இதனால், சொத்து ஆவணங்களில் உள்ள சாதி பெயரை சேர்த்த செட்டில்மெண்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இதற்கான நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தா