பட்டியலின சமூகத்தினரிடம் சாதிய பாகுபாடா? தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நேரில் ஆய்வு

x

திருப்பூர் மாவட்டம் மைவாடி ஊராட்சியில் பட்டியலின மக்களிடம் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக தேசிய ஆதி திராவிடர் ஆணைய அதிகாரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்ட பட்டிலின மக்கள், புகார் அளித்த முருகானந்தம் என்பவர், சொந்த பிரச்சினைக்காக சாதி பிரச்சினையை உருவாக்கி ஊர் பிரச்சினையாக மாற்றுவதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, தடை விதிப்பதாக கூறப்பட்ட கோயில் மற்றும் தெரு, இரட்டை குவளை புகாருக்குள்ளான கடை ஆகியவற்றில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதி திராவிடர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன், புகார்களில் கூறப்பட்டது போன்று எதுவும் இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்