முந்திரி காட்டில் `கிளை’ உயிர்.. பிணவறையில் உடல்.. திடுக்கிடும் சம்பவம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அதிமுக கிளை செயலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகரம் கிராமத்தின் அதிமுக கிளைச்செயலாளராக இருப்பவர் நாகராஜ். இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் மர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆண்டிமடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர், நெட்டிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள முந்திரி வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story