"சட்டவிரோத மணல் குவாரிகள் வழக்கு" - உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்த பொதுநல வழக்கு, செப்டம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆறு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரிகள் குறித்த நிலையான மேலாண்மை வழிகாட்டுதலை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, அதை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரியும், தமிழ்நாட்டை சேர்ந்த எம். அழகர்சாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். மணல் குவாரிகள் தொடர்பாக கடந்த 2020-ம் வெளியிடப்பட்ட விரிவான வழிகாட்டுதல்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி அழகர்சாமி தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் தலைமையிலான அமர்வு, வழக்கை வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி மீண்டும் விசாரணை எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தது.


Next Story

மேலும் செய்திகள்