ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் - பள்ளியில் சிபிசிஐடி விசாரணை

x

ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் - பள்ளியில் சிபிசிஐடி விசாரணை

குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பவம் நடைபெற்ற பள்ளியில் நெல்லை மண்டல துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டம் அதங்கோடு மாய கிருஷ்ண வித்யாலயா பள்ளியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடிக்க குடுத்து சிறுவன் உயிரிழந்த நிலையில் இறந்த சிறுவனுக்கு நீதி வேண்டும் என்று கூறி சிறுவனின் உடலை வாங்க மறுத்து வரும் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வழக்கானது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை நெல்லை மண்டல சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் மாவட்ட ஆய்வாளர் பார்வதி ஆகியோர் தலைமையில் முதற்கட்ட விசாரணையை சிறுவன் குடித்த ஆசிட் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் படித்த பள்ளியில் இருந்து துவங்கி உள்ளனர்.

பள்ளிக்கூடத்திற்கு வந்த அதிகாரிகள் பள்ளி வகுப்பறை வளாகம் மற்றும் பள்ளிக்கூடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு பள்ளி நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்