வாய்பேச முடியாது காதும் கேட்காது-சாப்பாடு வாங்க சென்றவர்கள்.. பின்னால் வந்த எமன்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத 3 சிறுவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊரப்பாக்கம் செல்லியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்கள் ஜம்பப்பா மற்றும் அனுமந்தப்பா. இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்களான நிலையில், இவர்களுடைய மகன்களான ரவி, சுரேஷ், மஞ்சுநாதன் ஆகிய மூவரும், கர்நாடகவில் உள்ள காது கேளோதோர் பள்ளியில் தங்கி பயின்று வந்திருக்கின்றனர். இதில், மஞ்சுநாதானால் வாய் பேச இயலாதென்றும், ரவி மற்றும் சுரேஷ் ஆகிய இருவருக்கும் காதுகள் கேளாதெனவும் கூறப்படும் நிலையில், மூவரும் தசரா விடுமுறையை முன்னிட்டு ஊரப்பாக்கத்திற்கு வந்திருக்கின்றனர். அப்போது, உணவு வாங்குவதற்காக ஊரப்பாக்கம் அருகில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில் மூவரும் நடந்த சென்ற போது, மின்சார ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலை மூன்று சிறுவர்களும் அறிந்திராத நிலையில், மூவரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மகன்கள் மூவரின் சடலத்தை பார்த்து தாய் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.