புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுரின் குடும்பம்

x

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுரின் குடும்பம், வறுமையால் வாடித் தவித்து வரும் சோகத்தை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில்வே நிலையம் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார் குமார். சென்னை பழவந்தாங்கலில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த அவர், திருமணத்திற்கு பிறகு கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், மோனிஷா, கணேஷ் மணி என்ற பிள்ளைகளும் உள்ளனர். எளிமையான முறையில் குடும்பத்தை நடத்தி வந்த இவர்களுக்கு பேரிடியாய் விழுந்தது புற்றுநோய்...

குடும்பத்தலைவரான குமாருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டதால், அவரது குடும்பமே இடிந்து போனது..

கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த குமார் படுத்த படுக்கையாகவே உள்ளார்.

அவருக்கு தற்போது பால் மட்டுமே ஆகாரமாக வழங்கப்படுகிறது. அதுவும் தொண்டையில் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் டியூப் வழியாக மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது குடும்பத்தில் யாருக்கும் எந்தவித வருமானமும் இல்லாத சூழலில், பால் பாக்கெட் வாங்குவதற்கு கூட அடுத்தவரின் உதவியை எதிர்ப்பார்க்கும் சூழலில் உள்ளனர் குமாரின் குடும்பத்தினர்.

இந்நிலையில், குமார் இன்னும் 3 மாதங்கள் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் எனக் கூறியதால் குடும்பத்தினர் கடும் சோகத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் வருமானம் இல்லாமல் வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் இருந்த நிலையில், வீட்டை காலி செய்யும்படி கூறி விட்டதாக வேதனையுடன் கூறுகிறார் குமாரின் மனைவி நாகம்மா.


Next Story

மேலும் செய்திகள்