கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகுமா? - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

கைரேகை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகுமா? - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்ற உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.சட்டப் பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சின்னத்துரை, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்யாவிட்டால் பொருட்கள் வழங்கப்படாது என்று கூறப்படுவது உண்மையா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் அனைவரின் கைரேகைகளை பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று கூறினார். இதுவரை 45 சதவீதம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், கைரேகை பதிவு செய்யாவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்றும், தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்