ஸ்பெயினில் இருந்து பறந்து வந்து பிள்ளையார் கோயிலில் திருமணம் - "மாலை டும் டும்..மங்களம் டும் டும்" - "இது தான்யா தமிழ் பண்பாடு"
நாட்றம்பள்ளி அருகே ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், கோயிலில் மாலை மாற்றிக் கொண்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
ஏழரைப்பட்டி கிராமத்திற்கு வந்த ஸ்பெயினை சேர்ந்த 15 சுற்றுலாப் பயணிகள் அங்கு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், அனைவரும் வேட்டி சேலை அணிந்துகொண்டு, பிள்ளையார் கோயிலுக்கு சென்று அவர்கள் வழிபட்டனர். அப்போது, தமிழ் கலாச்சாரம் பண்பாடு பிடித்துப்போனதால், ஸ்பெயின் தம்பதியர் மீண்டும் ஒருமுறை காதலை வெளிப்படுத்தினர். பின்னர், மாலை மாற்றிக் கொண்டு மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டனர்.
Next Story