மும்முரமாக நடைபெறும் எண்ணெய் கசிவு அகற்றும் பணி..தமிழக அரசு எடுத்த அதிரடி Action | Chennai | Ennore

x

கிரீக் பகுதியில், மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில், எண்ணெயை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

இங்கிருந்து அகற்றப்படும் எண்ணெய் உட்பட அபாயகரமான கழிவுகளை, கும்மிடிப்பூண்டியில் உரிமம் பெற்று, பாதுகாப்பாக வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சில இடங்களில் மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்றுவதற்கு எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அருகிலுள்ள நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினால் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்