விபத்தில் மயக்கம் மீட்காமல் `பர்ஸை' திருடிய கொடூரன் - காயமானவர் மொபைலுக்கு வந்த மெசேஜ் - பேரதிர்ச்சி

x

சென்னையில், விபத்தில் மயக்கம் அடைந்த நடத்துனரின் மணி பர்சை திருடிய உடன் பணிபுரியும் ஓட்டுனர், வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கே.கே. நகர் பணிமனையில் மாநகரப் பேருந்து நடத்துனராக பணிபுரியும் ஏழுமலை, கடந்த மாதம் 24-ஆம் தேதி, பணிக்குச் சென்றபோது, அந்த வழியாக சென்ற அதே பணிமனையில் ஓட்டுனராக பணிபுரியும் அலக்சாண்டர் ராஜாவை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். கே.கே. பணிமனை அருகே, அவர்கள் சென்ற வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில், ஏழுமலைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நேரிட்ட இடத்தில் அவருடைய மணி பர்சு மாயமானது. இதையடுத்து, கடந்த 13-ஆம் தேதி வங்கிக் கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை, வங்கியில் சென்று கேட்டுள்ளார். அப்போது, அவருடைய பெயரில் 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பம் வந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது, கடந்த மாதம் விபத்துக்கு நடக்கும்போது உடனிருந்த ஓட்டுனர் அலக்சாண்டர் ராஜா, வங்கி ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை திருடி, வங்கியில் கடன் பெற முயற்சி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில், வங்கிக் கிளைக்கு வந்த அலக்சாண்டர் ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்