"ஊருக்குள் பஸ் வரவேண்டும்.." - போராட்டத்தில் குதித்த மக்கள்..
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் புறவழிச்சாலையாக இயக்கப்பட்ட அரசு பேருந்துகளை ஊருக்குள் இயக்க கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 5 பேரை மட்டும் போலீசார் தனியாக அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட 50 பேர் தனியார் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் 5 பேரையும் தங்களுடன்தங்க வைக்க கோரி மற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story