தேனியில் பஸ் தலைகுப்புற கவிழ்ந்த பயங்கரம்.. அலறல்.. கதறல்.. 90 மாணவர்கள், டீச்சர்கள் நிலை என்ன?

x

தேனி ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து 90க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்துக் தேனிக்கு சுற்றுலா வந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் குன்னூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையை விட்டு இறங்கி வயலுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் அலறித் துடித்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை பத்திரமாக மீட்ட நிலையில், காயம் அடைந்த 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்