தமிழ்நாடு அரசுக்கு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை போட்ட அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி பொதுவெளியில் வெளியான கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 2013-ஆம் ஆண்டு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்துகளும் குறையவில்லை என்று நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் எத்தனை அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளரும், போக்குவரத்து துறை செயலாளரும் பதில் மனு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்