#justin || ஆம்னி பேருந்து, கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி
உளுந்தூர்பேட்டை அருகே பாலி காவல் சிறப்பு படை முகாம் எதிரே ஆம்னி பஸ் மற்றும் கண்டைனர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் இருவர் பலி - 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு
பாய்ந்த ஆம்னி பஸ் - கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு 15 பேர் காயம் - போக்குவரத்து நெரிசல்
சென்னையில் இருந்து 21 பயணிகளுடன் தனியார் சொகுசு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதற்கிடையே அந்த பஸ்சை பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த மணி 45 என்பவர் ஓட்டி வந்தார்.
விபத்து
இந்த நிலையில் அந்த பஸ் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி சிறப்பு காவல் படை முகாம் எதிரே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுக்கட்டையில் மோதி எதிர் திசையில் பாய்ந்தது. இதில் எதிரே இரும்பு லோடு ஏற்றுக் கொண்டு சென்னை நோக்கிச் சென்ற கண்டைனர் லாரியின் மீது ஆம்னி பஸ் அதிவேகமாக மோதியது.
2 பேர் உயிர் இழப்பு
மோதிய வேகத்தில் ஆம்னி பஸ்சின் முன் பகுதி மற்றும் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி இரண்டும் உருகுளைந்த நிலையில் விபத்தில் ஆம்னி பஸ் ஓட்டுனர் மணி மற்றும் எதிரே வந்த கண்டைனர் லாரியில் ஓட்டுநர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
15 பேர் காயம்
மேலும் இந்த விபத்தில் பஸ் பயணிகள் சுமார் 15 பேர் காயமடைந்த நிலையில் விபத்தைப் பார்த்த அருகே இருந்த காவல் சிறப்பு படை முகாமில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இதற்கு இடையே பஸ் முன் பகுதியில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட உயிருக்கு போராடிய ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ரவி மகன் சிவா கிளீனரை உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினர் சுமார்ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
தொடர்ந்து இந்த விபத்தின் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் போக்குவரத்தை மாற்றி அமைத்து தற்போது போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.