கருகிய நெற்பயிர்கள் - கலெக்டர் போட்ட உத்தரவு | thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகிய குருவை நெற் பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நடப்பாண்டில் திருவாரூரில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது, திருவாரூர் பகுதியில் குறைந்த அளவே பெறப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் கருகின. இதைத் தொடர்ந்து, உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கருகிய பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
Next Story