அழகர்கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம் - பாரம்பரியத்தை மறக்காத மக்கள் - "ஆஹா கண்கொள்ளா காட்சியா இருக்கே"

x

சோழவந்தான் அருகே விவசாயம் செழிக்க வேண்டி 30 கி.மீ. மாட்டுவண்டி பயணம் செய்த கிராம மக்கள் அழகர் கோவிலில் வழிபட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் கிராம மக்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் பயணம் செய்கின்றனர். தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வரிசையாக மாட்டுவண்டியில் அழகர்கோவிலுக்கு சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்குகின்றனர். பின்னர் விவசாயம் செழிக்க வேண்டி கள்ளழகரை வழிபட்ட பின்னர், 18-ம் படி கருப்பனுக்கு கோழி, சேவல்களை பலியிட்டு சமைத்து சாப்பிட்டுவிட்டு ஊர் திரும்புகிறார்கள். பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டுவண்டிகளில் பயணம் செய்யும் கிராம மக்களை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்