மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் - சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள்

x

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் துவக்கி வைத்தார். போட்டியில் சீறி பாய்ந்து சென்ற 800 கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.

சிவகங்கை மாவட்டம் நசிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் சுருளிப் பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த இரட்டை மாட்டு வண்டி வீரர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தருமத்தோப்பு கிராமத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு கன்றுவிடும் திருவிழா நடைபெற்றது. வாடி வாசல் வழியாக கன்றுகள் சீறிப்பாய்ந்து சென்ற நிலையில், இருபுறமும் நின்ற பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்