காளை விடும் விழா..! புழுதி பறக்க சீறிப்பாய்ந்த காளைகள் | Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூரில் காளை விடும் விழா விமர்சையாக நடைபெற்றது. 102ஆம் ஆண்டாக நடைபெற்ற விழாவில், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட தூரத்தை, குறைந்த நேரத்தில் கடந்த முதல் 3 காளைகளின் உரிமையாளர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் விழாவை கண்டு ரசித்தனர்
Next Story