செய்யாத வேலைக்கு கொடுத்த பில்ட் அப்..முகத்திரையை கிழித்த ஏரியா மக்கள்..விருதுநகரில் பகீர் சம்பவம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நந்திக்குண்டு ஊராட்சியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பேவர் பிளாக் கல் பதித்ததாகவும், மொத்த திட்ட மதிப்பீடு 4 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் என்றும், செய்யாத வேலைக்கு, வேலை செய்ததாக வேறு இடத்தில் விளம்பர பலகை வைத்து ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேவர் பிளாக் சாலை போடப்பட்டதாக கூறப்படும் இடத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல இடமில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்தப் பாதையினை அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
Next Story