மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்.. வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் வருமா? காத்திருக்கும் சஸ்பென்ஸ்

x

2024-25 ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதனையொட்டி, நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்தார். அதில்

2024ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், 2025 ம் நிதியாண்டில் பொருளாதாரம் 6.5% இருந்து 7% ஆக வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் சிலிண்டரை விலைவாசி குறைந்திருப்பதாகவும்,

இந்திய விமான நிலையங்களில் கையாளப்பட்ட மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 15 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்