சொத்து பிரச்சினையில் அண்ணன்-தம்பி டிஷ்யூம்... டிஷ்யூம்... சுத்தி நின்று வீடியோ எடுத்த மக்கள்... பரபரப்பான கிருஷ்ணகிரி

x

தேர்பட்டியை சேர்ந்த சகோதரர்களான நடராஜன், ஆறுமுகத்திற்கு சொந்தமான பூர்வீக சொத்து காவேரிப்பட்டினத்தில் உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நடராஜனுக்கு சொந்தமான சொத்தை ஆறுமுகம் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், நடராஜனுக்கு சொத்து சொந்தம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பூர்வீக சொத்தில் தனக்கு பங்கு உள்ளது எனக்கூறி, ஆறுமுகம் டிராக்டர் மூலம் சொத்தை உழுவதற்காக சென்றார். அப்போது, காவேரிபட்டினம்-கிருஷ்ணகிரி சாலையில், அண்ணன் தம்பி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் நடராஜன் மற்றும் ஆறுமுகம் குடும்பத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்