அண்ணனை கொலை செய்தவரை 8 மாதம் காத்திருந்து கருவறுத்த தம்பி - ஜாமினில் வந்த அடுத்த நொடி பழிதீர்ப்பு

x

அண்ணனை கொலை செய்தவரை 8 மாதம் காத்திருந்து கருவறுத்த தம்பி - ஜாமினில் வந்த அடுத்த நொடி பழிதீர்ப்பு

ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலைவழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த இளைஞர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியை சேர்ந்தவர் முரளி.

கூலித்தொழிலாளியான இவர், ஓசூர் அருகே பெத்தகொள்ளு எனுமிடத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

சடலத்தை கைப்பற்றி ஓசூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஓசூர் அந்திவாடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் உதயகுமார், கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு முரளி கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் முரளி வெளிவந்த நிலையில், உதயகுமார் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரது தம்பி சரவணன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளியை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஓசூரை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 4 வீச்சரிவாள்கள், 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணனை கொலை செய்தவரை, கூட்டாளிகளுடன் சேர்ந்து தம்பி பழிதீர்த்த சம்பவம், ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்