துண்டு துண்டாக வெட்டியது யார்? - அதிகாரிகள் மீது விழுந்த சந்தேக நிழல்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, பழமையான பாலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இரும்புகள் மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்க்குடி மற்றும் தெப்பக்காடு அருகே ஆங்கிலோர்களால் கட்டப்பட்டு நூற்றாண்டு கடந்த இரண்டு பாலங்கள் உடைக்கப்பட்டு, இரண்டு புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இரண்டு பாலங்களில் அடிப்பகுதி முழுவதும் மிகப் பெரிய இரும்புகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த இரும்புகள் அகற்றப்பட்டு, புதிய பாலங்களின் அருகில் வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ராட்சத இரும்புகள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து தந்தி டிவி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இரும்புகள் காணாமல் போனது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, மாயமான இரும்புகள் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட நிலையில்,

கூடலூர் நகர சாலையோரத்தில் போடப்பட்டுள்ளன.

மாயமான இரும்புகள் எங்கு கொண்டு செல்லப்பட்டது? துண்டு துண்டாக வெட்டியது யார்? மீதமுள்ள இரும்புகள் எங்கே என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளாமல் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பின்வாங்கியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்