கோவை தனியார் கல்லூரியில் பெட்டி பெட்டியாக...நள்ளிரவு வரை நடந்த ரெய்டு

x

#Kovai

கோவை தனியார் கல்லூரியில் பெட்டி பெட்டியாக...நள்ளிரவு வரை நடந்த ரெய்டு

கோவை தனியார் கல்லூரியில் திடீர் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் பெட்டி பெட்டியாக ஆவணங்களை எடுத்து சென்றனர்.கோவையைச் சேர்ந்த பிரபல மருத்துவர்

முத்து சரவணகுமார் என்பவர் டாக்டர்.முத்தூஸ் என்ற பெயரில் எலும்பு முறிவு மருத்துவமனையும், ஹெல்த் சயின்ஸ் கல்லூரியும் நடத்தி வருகிறார்.

கொரொனாவிற்கு பிறகு கடந்த இரு வருடங்களாக கல்லூரி செயல்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்று திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 11 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், பெட்டி பெட்டியாக ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். தொடர்ந்து அதன் உரிமையாளர் முத்து சரவணகுமாரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்