திடீரென தீப்பிடித்து எரிந்த படகுகள் - காஷ்மீரில் பரபரப்பு
ஸ்ரீநகர், காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள், திடீரென தீப்பிடித்து எரிந்தன. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தால் ஏரியில், ஒரு படகில் பற்றிய தீ, மளமளவென பரவி மற்ற படகுகளும் தீப்பிடித்து எரிந்தன. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story