BMW காரில் திடீர் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கார் ஓட்டுனர்
BMW காரில் திடீர் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கார் ஓட்டுனர்
கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த BMW காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காரிலிருந்து திடீரென அதிக அளவு கரும் புகை வந்ததை கண்ட கார் ஓட்டுநர் உடனடியாக சாலை நடுவே காரை நிறுத்தியுள்ளார்.
இந்த கரும் புகை மளமளவென தீயாக பரவி கார் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
துரிதமாக செயல்பட்டு காரை ஓட்டுநர் நிறுத்தி வெளியேறியதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பற்றி எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீச்சு அடித்து அணைத்தனர்.
Next Story