தாமிரபரணி நதியில் ஓடிய ரத்தம் - டெலிவரி பாய் ஓட ஓட வெட்டி படுகொலை
நெல்லையில், முன்விரோதம் காரணமாக உணவு டெலிவரி நிறுவன ஊழியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தை சேர்ந்த முகேஷ் என்பவருக்கு, சுபிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முகேஷ், தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணி முடிந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தாமிரபரணி நதிக்கரையில் சுடலை மாடசாமி கோவில் அருகே மறைந்திருந்த மர்மக்கும்பல், முகேஷை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதுகுறித்த தகவலின்பேரில் முகேஷின் உடலை போலீசார் மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தனது கணவர் கொலைக்கு சின்னகுட்டி என்பவரின் குடும்பத்துடன் இருந்த முன்விரோதமே காரணம் என முகேஷின் மனைவி சுபிதா புகார் தெரிவித்தார். இந்நிலையில், முகேஷின் உறவினர்கள், சின்னகுட்டி மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகளுக்குச் சென்று, அங்கிருந்த பொருட்களை அடித்து சூறையாடினர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.