ரத்தம் சொட்ட சொட்ட நடனம்
- கோவை ராஜவீதி பகுதியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில், தேவாங்கர் சமுதாய மக்களால் கத்தி போடும் சடங்கு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட தேவாங்கர் சமுதாய ஆண்கள், கையில் இரண்டு கத்திகளை வைத்துக்கொண்டு தங்களை தாங்களே தாக்கிக் கொள்ளும் வகையில் ஆடினர். அவர்களது தோள்களில் ரத்தம் வழிந்தோடிய போதும் ஆட்டம் தொடர்ந்தது. இறுதியில் கைகளில் ஏற்பட்டுள்ள காயத்தில் திருமஞ்சன பொடியை பூசிக்கொண்டனர்.
Next Story