போலீஸ் கண் முன்னே சரமாரி அடி.. பாஜக நிர்வாகிகள் இடையே கேங் வார்
வாணியம்பாடியில் லாரி பாடி கட்டும் தொழில் செய்து வரும் பாஜக நிர்வாகி பிரதீப் என்பவருக்கும், லாரி சர்வீஸ் செய்து வரும் சதீஷ் என்பவருக்கும் இடையே தொழில் போட்டி சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சதீஷின் உறவினரான பாஜகவைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் அவருடைய நண்பர்கள் என 10 பேர் பிரதீப்பை தாக்கியுள்ளனர். மோதலை விளக்கச் சென்ற திருப்பதி, கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும், அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில், காயமடைந்த 3 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். இந்த மோதல் குறித்து மருத்துவமனைக்கு போலீசார் விசாரிக்கச் சென்றபோது, அவர்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story