பாஜக நிர்வாகி செய்த பகீர் சம்பவம்? - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், இளைஞரை ஜாதி பெயரை சொல்லி தாக்கியதாக, பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சதீஷ்குமார் நடத்தி வரும் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தில், சங்கர் என்பவர் தவணைத் திட்டத்தில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். 4 மாத தவணையை கட்டாததால், சங்கரை அலுவலகத்துக்கு அழைத்த சதீஷ்குமார், ஜாதி பெயரை சொல்லி தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த சங்கர், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சதீஷ்குமாரை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சங்கர் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்