குற்றம்சாட்டப்பவர்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் அரசியல்..! உச்சநீதிமன்றம் அதிரடி | BJP

x

பாஜக ஆளும் மாநிலங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வீடுகளை புல்டோசர்களை கொண்டு அழிக்கும் நடவடிக்கை வழக்கமாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது. அனுமதியின்றி இதுபோன்று கட்டிடங்களை இடிக்கக்கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. புல்டோசர் நீதியை புகழ்வதையும், பாராட்டுவதையும் இந்நாட்டில் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோயிலாக இருந்தாலும் சரி, தர்காவாக இருந்தாலும் சரி சாலைகள், நீர்நிலைகள் அல்லது ரயில் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாடு முழுவதற்குமான வழிகாட்டு நெறிமுறைகளை கொண்ட தீர்ப்பை கூற இருக்கிறோம் என குறிப்பிட்டு தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்