நம்பிய சக பிஜேபி பிரமுகர்.. குடும்பத்தோடு நடுரோட்டில் நிறுத்திய பாஜகவினர்..

x

கோவில்பட்டியை சேர்ந்த பாஜக பிரமுகரான மாரியப்பன் என்பவர், கடன் தொல்லை காரணமாக, தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முயன்றுள்ளார். அப்போது மாரியப்பனை சந்தித்த, பாஜக நிர்வாகிகளான விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நல்லதம்பி மற்றும் ஆலம்பட்டியை சேர்ந்த அட்டை ராசு ஆகியோர் நிலத்தை விற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். அதேபோல், மற்றொரு பாஜக நிர்வாகியான நிதி நிறுவன உரிமையாளர் அசோக்குமார் என்பவரிடம் ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு நிலம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் மாரியப்பனிடம் பணத்தை தராமல், 3 பேரும் சேர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், மாரியப்பனுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கடைகளை இரவோடு இரவாக இடித்ததால், இதுதொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி இருவரும் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்