பாஜக பிரமுகர் காரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. சேலத்தில் பரபரப்பு

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாஜக மாவட்டச் செயலாளரின் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தாரமங்கலம் அருகே பாஜக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ரவியின் காரை வழிமறித்து பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த முன்னாள் எம்.பி.அர்ச்சுனனின் மகனும் பாஜக பிரமுகருமான செந்தில்குமாரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓமலூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்