செப்.1 முதல் பாஜகவில்... டெல்லி தலைமை அதிரடி முடிவு | BJP

x

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பாஜகவிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது,

பாஜகவிற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, எதிர்வரும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பாஜகவிற்கு புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்