ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 5 பாலங்கள் - பெரும் பதற்றத்தில் வடமாநிலம்.. பீதியில் மக்கள்

x

ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 5 பாலங்கள் - பெரும் பதற்றத்தில் வடமாநிலம்.. பீதியில் மக்கள்

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... மாதேபூரில் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையால் 3 கோடி ரூபாய் செலவில் 75 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வந்த இந்தப்பாலத்தின் தூணானது அடியில் சென்ற ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் இடிந்து விழுந்தது. கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு பாலம் இடிந்து விழுந்தது... அதேபோல் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கட்டுமானப் பணியில் இருந்த சிறிய பாலம் இடிந்து விழுந்தது. மேலும் ஜூன் 22 அன்று, சிவான் பகுதியில் ஜூன் 22 அன்று, கண்டக் கால்வாயின் மீது கட்டப்பட்ட பாலமும் இடிந்தது... அதற்கு முன்னர் ஜூன் 19ல் அராரியாவில் பக்ரா ஆற்றில் கோடிக்கணக்கில் செலவழித்து கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்தது... இந்நிலையில், தற்போது மதுபானி மாவட்டத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்ததன் மூலம் ஒரே மாதத்தில் இது 5வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்