5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பீகார் இளைஞர்..அழைத்து வந்த கொச்சி போலீஸ்...
கொச்சி அருகே 5 வயது சிறுமியை பீகார் இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் மேல் வீட்டில் வசித்து வந்த இளைஞர் அஸ்ஃபாக் ஆலமை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கின் விசாரணைக்காக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, இளைரை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் ஆத்திரத்தில் அவரை அடிக்க பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி சடலமாக மீட்கப்பட்ட ஆலுவா மார்க்கெட்டில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியே பரபரப்பானது.
Next Story