பவானியில் கரைபுரளும் வெள்ளம்... பக்தர்களுக்கு பறந்த உத்தரவு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில்
கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆடிப் பெருக்கை ஒட்டி, பக்தர்கள் ஆற்றில்
நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஆற்றின்
கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஷவர்களில்
பக்தர்கள் குளித்தனர். பின்னர் ஆற்றின் கரையோர பகுதியில்
ஏழு கல் எடுத்து வைத்து, அவற்றிற்கு விபூதி, சந்தனம்,
குங்குமம் இட்டு, படையல் படைத்து, தேங்காய் உடைத்து
பூஜை செய்து தங்கள் முன்னோர்களை குடும்பத்துடன்
வழிபட்டனர். வனபத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள்
கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
Next Story