பவானியில் கரைபுரளும் வெள்ளம்... பக்தர்களுக்கு பறந்த உத்தரவு | Bhavani River

x

காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், புகழ்பெற்ற பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தில், காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கூடுதுறை காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. காவிரியாற்றில் பொதுமக்கள் இறங்காத வகையில், போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் காவிரி ஆற்றில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்