வழக்கு தொடர்ந்த பெண்ணை கோர்ட்டில் வைத்தே கத்தியால் குத்தி கிழித்த வக்கீல்.. பின்னணியில்..

x

தன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்ணை, வழக்கறிஞர் ஒருவர், நீதிமன்றத்தில் வைத்தே கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் என்பவர் மீது நிலத் தகராறு தொடர்பாக விமலா என்ற பெண் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பான புகார் பெங்களூரு நகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், விசாரணை முடிந்து நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்த விமலாவை, ஜெயராம் வழிமறித்து கத்தியால் குத்தி கொல்ல முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில், இருவருக்குமிடையே நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும், இதில், விமலாவுக்காக லட்சக் கணக்கில் ஜெயராம் பணம் செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்