ஒரே பேட்டர்ன்.. ஒரே ஆட்கள்..?..தமிழகம், கர்நாடகாவை அதிரவிட்ட வடமாநில கும்பல்.. கிறுகிறுக்கும் போலீஸ்
ஒரே பேட்டர்ன்.. ஒரே ஆட்கள்..?..தமிழகம், கர்நாடகாவை அதிரவிட்ட வடமாநில கும்பல்.. கிறுகிறுக்கும் போலீஸ்
பெங்களூரு ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு பெலந்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் இருந்த 16 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தமிழக பதிவெண் கொண்ட காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
மேலும் கொள்ளையர்களில் மூன்று பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஓசூரில் நடைபெற்றுள்ள ஏடிஎம் கொள்ளையும் இதே கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டும் சம்பவத்திலும்
ஈடுபட்ட கொள்ளையர்களின் உருவ அமைப்பு மற்றும் கொள்ளையடிக்கும் முறைகள் துல்லியமாக ஒத்து போவதாக போலீசார் கூறுகின்றனர். இதனிடையே கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.