ஹோட்டலில் பீஃப் ஃப்ரை வாங்கிய குமரி போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல உணவகத்தில் வாங்கப்பட்ட மாட்டிறைச்சியில் பல்லி இருந்த விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்...
Vovt
மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரபல உணவகத்தில் காவலர் புவேந்திரன் தனது மகனிடம் அந்தக் கடையில் இரவு சாப்பிட பீஃப் ஃப்ரை வாங்கி வரக்கூறியிள்ளார்... வாங்கி வந்த பிறகு புவேந்திரனும் அவரது மகனும் சாப்பிட பார்சலைப் பிரித்த போது வால் துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்ததகாக் கூறப்படுகிறது. இதுகுறித்து புவேந்திரன் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் புகாரளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் தலைமையில் உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. மேலும் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.