7ம் தேதி தான் கடைசி.. இல்லையென்றால் ரத்து - BE, BTech.. வெளியான அறிவிப்பு
7ம் தேதி தான் கடைசி.. இல்லையென்றால் ரத்து - BE, BTech.. வெளியான அறிவிப்பு
பி.இ - பிடெக் பொறியியல் படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வில் 20 ஆயிரத்து 232 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பி.இ, பிடெக் பொறியியல் படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 200 முதல் 179 வரை கட் ஆப் மதிப்பெண்கள் உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கட் ஆப் மதிப்பெண் 179 வரையில் பெற்ற ஆயிரத்து 343 மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 435 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.
தொழிற்கல்விப் பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 85 வரையில் பெற்ற 2ஆயிரத்து 267 மாணவர்களும் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில் மொத்தமாக, 20ஆயிரத்து 232 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வரும் 7ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளை உறுதி செய்து, சேரலாம் என்றும் அவ்வாறு சேரவில்லை என்றால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.