பத்து பதிமூணா மாறும் - தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தட்டி தூக்கிய போலீஸ்
10 லட்சம் ரூபாய் கொடுத்தால் பதிமூன்று லட்சம் கிடைக்கும் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே டிராவல்ஸ் தொழில் நடத்தி வரும் சுரேஷ் என்பவரிடம் மோசடி நடந்துள்ளது. 10 லட்சம் ரூபாயை 500 ரூபாய் நோட்டாக கொடுத்தால், அதற்கு கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 13 லட்ச ரூபாய் தருவதாக ஒரு கும்பல் ஆசைவார்த்தை கூறியுள்ளது. இதன்படி, 10 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு, பணக்கட்டுகளை போல வெறும் காகிதங்களை பையில் பண்டலாக கட்டிக்கொடுத்து மோசடி செய்ததாக, சுரேஷ் புகார் அளித்தார். இதன்பேரில், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story