கலவர காடாகும் வங்கதேசம்... தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா...நாடு திரும்பிய 4500 மாணவர்கள்
கலவர காடாகும் வங்கதேசம்... தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா...நாடு திரும்பிய 4500 மாணவர்கள்
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் கலவரம் காரணமாக, 4500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்
வங்கதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக 30 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு கல்வி பயின்று வந்த 4500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிட்டகாங், ராஜ்ஷாஹி, சில்ஹெட் மற்றும் குல்னா ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மாணவர்கள் நாடு திரும்ப உதவி வருகின்றனர். வெளியுறவத்துறை அமைச்சகம், மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது. இதே போன்று, நேபாளத்தைச் சேர்ந்த 500 மாணவர்களும், பூட்டானின் 38 மாணவர்களும், மாலத்தீவு மாணவர்களும் இந்தியா வந்துள்ளனர். வங்கதேசத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள மீதமுள்ள இந்திய மாணவர்களுடன், இந்திய அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது