இந்தியாவுக்குள் ஊருவிய வங்கதேசத்தினர்.. கரூரை அதிரவிட்ட பகீர் தகவல்

x

வெள்ளியணை அடுத்த தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் காட்டன் ஆலையில், வங்கதேசத்தை சேர்ந்த சிலர் தங்கி வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆலையில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது பாஸ்போர்ட், விசா என எதுவும் இல்லாமல் அங்கு தங்கி வேலை பார்த்து வந்த 5 பேரை கைது செய்தனர். சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 5 நபர்களை பணியில் அமர்த்திய தனியார் ஆலை நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த 5 பேருக்கும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்